ஈரோடு அக் 6:
ஈரோடு மாநகராட்சி 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலங்களிலும் உதவி ஆணையாளர்கள் பொறுப்பில் நிர்வாகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி பகுதி மக்கள் தங்களது குறைகளை, பிரச்சனைகளை நேரடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வகையில் மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டல அலுவலகங்களிலும் அந்தந்த மண்டல உதவி ஆணையாளர்கள் தலைமையில் மாதம்தோறும் 10 ம் தேதி பொது மக்கள் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலகத்திற்கு நேரடியாக சென்று உதவி ஆணையாளரை சந்தித்து அந்த பகுதியில் உள்ள பிரச்சனை, குறைகள் குறித்து மனு கொடுத்து வந்தனர்.பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக ஒவ்வொரு மாதம் 10 ம் தேதி மண்டல அளவிலான குறை தீர்க்கும் நாள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக இந்தக் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது பாதிப்பு குறைய தொடங்கி உள்ளதால் இனி வழக்கம்போல் ஒவ்வொரு மாதம் 10-ம் தேதி 4 மண்டல அலுவலகத்திலும் மண்டல அளவிலான குறைதீர்க்கும் நாள் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். அதன்படி வரும் 10ம் தேதி குறைதீர்க்கும் நாள் கூட்டம் 4 மண்டல அலுவலகங்களில் நடைபெறும் எனவும், அந்தந்த பகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் மண்டல அலுவலகங்களில் சென்று தங்கள் பிரச்சினை குறித்து மனு அளிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/