ஈரோடு அக் 30:

ஈரோடு நந்தா இயன்முறை மருத்துவ கல்லூரி சார்பில் உலக பக்கவாத தின விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நேற்று நடந்தது.

இந்த ஊர்வலத்துக்கு நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் தலைமை தாங்கினார். செயலாளர்கள் எஸ்.நந்தகுமார் பிரதீப், எஸ்.திருமூர்த்தி, நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, முதல்வர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ, -மாணவிகள் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.

ஈரோடு காலிங்கராயன் இல்லத்தில் தொடங்கிய ஊர்வலம் பெருந்துறை ரோடு வழியாக சென்று ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது. இதில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டார்கள்.  https://www.erode.nic.in,

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/