கோபிசெட்டிபாளையம் டிச 6:
கோபிசெட்டிபாளையம் அருகே டி.என்.பாளையத்தில் உள்ள ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லுாரியில் உலக மண் தின விழா நடந்தது. மண்ணியல் துறை உதவி பேராசிரியர் பிரவீன்குமார் வரவேற்றார். ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி சிறப்புரையாற்றினார். ஆராய்ச்சி இயக்குனர் கிருபாகர் முரளி மண் வளம் குறித்தும்.
முதல்வர் என்.அசோகராஜா மண்வள மேம்பாடு குறித்தும், மூன்றாமாண்டு மாணவி திவ்யதாரணி மண்ணின் ஊட்டச்சத்துகள் பற்றியும், உதவி பேராசிரியர் ஜி.கீர்த்தனா மண்ணின் பயன்பாடு குறித்தும் பேசினார். சித்ரா நன்றி கூறினார். கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். https://www.tantransco.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/