ஈரோடு செப் 28: ஈரோடு ரெயில்வே கூட்செட் பாரம் சுமக்கும் தொழிலாளர்கள் எச்.எம்.எஸ்., சங்கத்தின் சார்பில் கூட்ஸ்செட் வளாகத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஈரோடு தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் சக்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக எஸ்.ஆர்.எம்.யு., பாஸ்கர், எச்.எம்.எஸ்., மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இதில், ஈரோட்டில் செயல்பட்டு வரும் கூட்ஸ் செட்டினை பெருந்துறை, விஜயமங்கலம், ஈங்கூர் பகுதிக்கு இடமாற்றம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தியும், கூட்ஸ்செட்டை தனியாருக்கு வழங்கும் முடிவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் குமாரசாமி, துணை செயலாளர் மனோகரன், முத்து, முனுசாமி மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/