ஈரோடு ஆக 14:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக பகல் நேரத்தில் அதிகமாக வெயில் வாட்டுவதுடன், வெப்பமான சூழ்நிலை நிலவுகிறது. அதேநேரம் மாலை மற்றும் இரவில் சிறிது நேரம் மழை பெய்து வந்தது. மலைப்பகுதியான சத்தியமங்கலம், கடம்பூர், தாளவாடி, அந்தியூர், பர்கூர் போன்ற பகுதிகளில் அடிக்கடி மழை பெய்தது. இரவு நேரங்களில் சற்று இதமான சூழ்நிலை தொடர்ந்தது. நேற்று காலை முதல் கடும் வெயில் தோன்றியது. மாலையில் மின்னல், இடி இன்றி 30 நிமிடங்களுக்கு மேல் மழை பெய்தது. அதன் பின்னரும் வெப்பமான நிலையே தொடர்ந்தது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today