ஈரோடு ஆக 19:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக புறநகர் மாவட்ட பகுதிகளான கவுந்தப்பாடி, கோபி, கொடுவேரி, சத்தியமங்கலம், குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம் அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்தது.

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று நேற்று காலை வழக்கம்போல் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பத்து நிமிடம் சாரல் மழை பெய்தது. இதேப்போல் கவுந்தபாடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குண்டேரிப்பள்ளம் அணை பகுதி வரட்டுப்பள்ளம் அணை பகுதிகளிலும் மழை பெய்தது. கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை பகுதிகளிலும் இரவில் மழை பெய்தது.

ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-கவுந்தப்பாடி 29.4, குண்டேரிபள்ளம்- 24.4, வரட்டுப்பள்ளம் 15.2, கோபி 13.6, கொடிவேரி 10.1, சத்தியமங்கலம் 9, பெருந்துறை 9, நம்பியூர் 5, பவானி 3.8 மி.மீட்டர் மழை பதிவானது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today