ஈரோடு, அக் 23:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது. தாளவாடி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக விளைபயிர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றது. நேற்று மாலை முதல் இரவு வரை பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழையளவு விபரம், ஈரோடு 23 மில்லி மீட்டர், கொடுமுடி 18.2, பெருந்துறை 14.2, பவானி 27.6, கோபி 35.8, பவானிசாகர் 7.2, தாளவாடி 12.5, நம்பியூர் 4, சென்னிமலை 22, மொடக்குறிச்சி 24, கவுந்தப்பாடி 18, எலந்தைகுட்டை மேடு 44, அம்மாபேட்டை 27.6, கொடிவேரி 7.2, குண்டேரிப்பள்ளம் 14.2, வரட்டுப்பள்ளம் 48.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 20.7 மில்லிமீட்டர் பதிவாகி உள்ளது.

மழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 6817 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றில் 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது. https://www.tnpds.gov.in  

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/