ஈரோடு நவ 2:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் காலை முதல் மதியம் வரை வெயில் கொளுத்தியது. பின்னர் மாலை வானில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இருந்தன. மாலை 4.30 மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதைத் தொடர்ந்து லேசான சாரல் மழை பெய்தது. நள்ளிரவில் ஒரு மணி நேரமும் பரவலாக மழை பெய்தது.

மாநகர் பகுதியில் இந்த திடீர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளில் சாலைகள் சேரும் சகதியுமாக காட்சி அளித்தன. குறிப்பாக ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை முதல் இரவு பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. குறிப்பாக ஈரோடு மாநகர் பாதிக்கப்பட்ட பழனிமலை வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் ஜவுளி குடோன்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு திடீரென மின்தடை ஏற்பட்டது.

பின்னர்  நள்ளிரவு 1.15 மணிக்கு மீண்டும் மின்சாரம் வந்தது. பின்னர் 3 மணிக்கு மீண்டும் மின்தடை ஏற்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை 8 மணி வரை மின் இணைப்பு வரவில்லை. இதனால் இரவு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகள் பெரியவர்கள் கடும் அவதி அடைந்தனர். மழை வேறு பெய்ததால் கொசு தொல்லையும் அதிகரித்தது. புழுக்கத்தாலும், கொசு தொல்லையாலும் மக்கள் விடிய விடிய தூங்காமல் அவதி அடைந்தனர். உடனடியாக இந்த பகுதியில் மின்தடையை சரி செய்ய வேண்டும் என மின்சாரத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் ரோடுகள் சேறும் சகதியுமாக காட்சி அளித்தன. இதனால் இந்த பகுதியில் வாகனங்கள் அனைத்தும் மெதுவாக ஊர்ந்து சென்றன. ஈரோடு மாவட்டத்தில் குண்டேரிப்பள்ளம், சத்தியமங்கலம், பவானி, பவானி சாகர், கவுந்தபாடி, கொடிவேரி, போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் 22.3 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் நேற்றிரவு  பெய்த மழை அளவு  மில்லி மீட்டரில் வருமாறு: -குண்டேரிபள்ளம் 22.3, சத்தியமங்கலம்- 21, ஈரோடு 20, பவானி -17, பவானிசாகர் -16.2, கவுந்தப்பாடி- 10, பெருந்துறை 9.2, கொடிவேரி 9, சென்னிமலை- 7, கோபி – 6.2, கொடுமுடி 6, மொடக்குறிச்சி 5, தாளவாடி 4.8, நம்பியூர்  2. https://www.tnebltd.gov.in  

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today