ஈரோடு நவ 27:

ஈரோடு மாவட்டத்தில் சற்று ஓய்வு விட்டிருந்த மழை நேற்று முதல் மீண்டும் தொடங்கி உள்ளது. வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பொழிவு இல்லாமல் இருந்த நிலையில், நேற்று இரவு பரவலாக மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் இன்று காலை நிலரவப்படி ஈரோடு 20 மில்லி மீட்டர், கொடுமுடி 31.6, பெருந்துறை 18.5, பவானி 15.2, கோபி 9.4, சத்தி 13, பவானிசாகர் 8.4, நம்பியூர் 6, சென்னிமலை 14, மொடக்குறிச்சி 20, கவுந்தப்பாடி 13.2, எலந்தைகுட்டைமேடு 9.8, அம்மாபேட்டை 10.2, கொடிவேரி 8, குண்டேரிப்பள்ளம் 34.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.

மழையின் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/