ஈரோடு சூலை 8:

தமிழக சுகாதாரத்துறையில் அவுட்சோர்சிங் முறை ரத்து செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளமைக்கு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் சங்கம் வரவேற்றுள்ளது. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் மாநில துணைத்தலைவர் சுசிலா தலைமையில்  நேற்று நடந்தது.

மாநில பொதுச் செயலாளார் சேரலாதன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். தமிழக சுகாதாரத்துறையில் அவுட்சோர்சிங் முறை ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்பது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றத்தை அமல்படுத்திட வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் கொரானா நோய் தொற்று தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களாக பணியாற்றி வரும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர்களுக்கு அரசு அறிவித்துள்ள ஊக்கதொகை வழங்கிட வேண்டும்.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 3ம் தேதிக்குள் சம்பளம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர் நன்றி கூறினார். புதிய நிர்வாகிகளாக மாவட்ட தலைவர் ரமேஸ், செயலாளர் ஜெயந்தி, பொருளாளர் மாலதி, துணைத்தலைவர் புவனா, இணைசெயலாளர் தினேஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே

https://www:erode.today