ஈரோடு சூலை 26:

ஈரோடு, கருங்கல்பாளையம் காவேரி ரோடு மீன் மார்க்கெட், ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட் போன்றவை செயல்பட்டு வருகிறது. பிற பகுதிகளில் மீன் கடைகளாக இயங்கி வருகிறது. இங்கு ஞாயிறுக்கிழமை நாட்களில் மீன் இறைச்சி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படும். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று மீன் மார்க்கெட்டுகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இறைச்சிகளை வாங்கி சென்றனர். இங்கு கடல் மீன்கள் அதிக அளவில் வருவதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.இன்று பாறை, சுறா,  சங்கரா,  நண்டு, மத்தி, அயிலை உட்பட பல்வேறு மீன்கள் வந்திருந்தன. தற்போது மீன்கள் வரத்து குறைந்துள்ளதால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக ஒரு கிலோ வஞ்சிரம் கடந்த சில நாட்களாக ரூ.600 முதல் ரூ.700 வரையிலான விலையில் விற்பனையானது. தற்போது ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இன்று மார்க்கெட்டில் வஞ்சிரம் மீன் குறைவாக வரத்தானது. இதேபோல், ஆடு, கோழி இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் கூட்டம் அதிகரித்ததால் ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி ரோடு மீன் மார்க்கெட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் மாநகராட்சி அதிகாரிகளும் மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து கண்காணித்தனர்

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today