பவானிசாகர் சூலை 18:

பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்ட மலைப்பகுதி, வட கேரளா பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்தும், கடந்த இரு தினங்களாக துாரல் மழையாக பெய்வதால், அணைக்கு நீர் வரத்து சரிந்தது. நீர் பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது. வனப்பகுதி வழியாக வரும் நீர், மாயாறு, பவானி ஆற்றின் வழியாக அணையை அடைந்தது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு அணைக்கு 3 ஆயிரத்து 586 கனஅடி நீர் வரத்தாகி அணையின் நீர் மட்டம் 95.40 கனஅடியாக உயர்ந்தது. அணையில் இருந்து 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. ஆனால் நேற்று காலை முதல் அணைக்கு வரும் நீரின் வரத்து சரிந்து வினாடிக்கு 1,086 கனஅடியானது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்கு 600 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 95.65 அடியாகவும், நீர் இருப்பு 25.45 டி.எம்.சி.,யாக இருந்தது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today