ஈரோடு ஆக 17:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசனங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 3 ஆயிரம் விளைநிலங்கள் பயனடைந்து வருகின்றது. இதே போல பவானி ஆற்றில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரால் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும், காலிங்கராயன் வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரால் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசனம் பெற்று வருகின்றது. இதுதவிர மேட்டூர் வலது கரை பாசனம் மூலம் 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றது.

இந்நிலையில் இந்தாண்டு பவானிசாகர், மேட்டூர் ஆகிய இரண்டு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வரத்து திருப்திகரமாக இருப்பதால் திட்டமிட்டபடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அனைத்து வாய்க்கால் பாசனங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து குறுவை சாகுபடிக்கான பணிகளில் விவசாயிகள் தீவிரமாகி வருகின்றனர். தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசன பகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் நெற்பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்துள்ளது. காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் நெல் நாற்றுநடவு செய்யும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. கடைசியாக திறக்கப்பட்ட மேட்டூர் மேற்கு கரை மற்றும் கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் நாற்றுவிடுவதற்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today