ஈரோடு ஆக 17:

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பயிர்கடன், நகைக்கடன் மற்றும் மகளிர் குழு கடன்கள் தொடர்பான புள்ளி விபரங்களை சேகரிப்பதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய காலத்தில் ஊதியம் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான நிதியை அரசு உடனடியாக வழங்க வேண்டும். 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக்கடைகளில் எடையாளர் பணியிடம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஈரோடு மாவட்டத்தில் இப்போராட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாய விலைக்கடை பணியாளர்கள் என 750க்கும் மேற்பட்டுள்ள பணியாளர்கள் ஈடுபட்டதாக சங்க நிர்வாகிகள் கூறினர். இதனால் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை, நகர கூட்டுறவு சங்கங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு பெரும்பாலான ரேசன் கடைகளும் மூடப்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் கூறினர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today