ஈரோடு, நவ. 15:

வாக்காளர் பட்டியல் சுருக்கத்திருந்த பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது.

சிறப்பு சுருக்கத்திருத்தத்தில் வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கு ஏதுவாக வருகின்ற 31ம் தேதி வரை  சம்மந்தப்பட்ட அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மற்றும் வாக்குச்சாவடி மையங்களிலும், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கு விண்ணப்பிக்க வசதியாக சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2222 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் பணிகள் நேற்று நடைபெற்றது. இப்பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று ஆய்வு செய்தார்.அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், சென்னம்பட்டி, சந்தைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்த பணிகளை கலெக்டர் கிருணுணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வருவாய்துறையினர் புறக்கணிப்புசட்டமன்ற தேர்தல் பணியில் பணியாற்றிய ஊழியர்களுக்கு செலவின தொகை வழங்கப்படாததை கண்டித்து நேற்று நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமினை மாவட்டம் முழுவதும் வருவாய்துறையினர் புறக்கணித்தனர். இதையடுத்து சிறப்பு முகாம்களில் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். https://www.erode.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today