ஈரோடு சூலை 26:
ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வ.உ.சி, பூங்கா கடந்த இரண்டு ஆண்டாக சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டது. பொதுமக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அங்குள்ள பெரியவர்களுக்கான பூங்கா மற்றும் சிறுவர்களுக்கான பூங்காவில் சறுக்கு, ஊஞ்சல், சிறிய ராட்டினம், மணலில் விளையாடும் இடம், நடந்து செல்லும் வகையிலான இடம், அமர்ந்து உண்பதற்கான இடங்கள், சிறிய கடைகள் என பல்வேறு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டன. மொத்தம், ஏழு கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணிகள் கொரோனா காலத்தில் நிறைவு பெற்றது. கொரோனா ஊரடங்கு தளர்வால் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. நேற்று ஞாயிறு என்பதால், ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள், காதலர்கள் அங்கு சென்று உற்சாகமாக காணப்பட்டனர். வரும் நாட்களில் வழக்கம்போல முழு அளவில் திறந்திருக்கும். நுழைவு கட்டணம், வாகன கட்டணம் பெறப்படும், என தெரிவித்தனர்
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today