ஈரோடு ஜன 1:

ஈரோடு மாவட்டத்திற்கு பொது விநியோகத் திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோதுமை, நெல் மூட்டைகள், அரிசி மூட்டைகள் சரக்கு ரெயில் மூலம் வந்து, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து லாரிகள் மூலம் குடோனுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து பொது வினியோக திட்டத்திற்காக 2,000 டன் நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் 42 பெட்டிகள்  மூலம் ஈரோடுக்கு வந்தன. இந்த நெல் மூட்டைகள் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு ரைஸ் மில்லுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அவை அரைத்து பொது விநியோகத் திட்டத்திற்காக அந்தந்த ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது. https://www.tnagrisnet.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today