தாளவாடி ஆக 10:

ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கிராமம் தேடி விதை வினியோகம்’ செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தாளவாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெ.மகாலிங்கம் தலைமையில் வேளாண் அதிகாரிகள் மலைக்கிராம பகுதிகளுக்கு நேரடியாக சென்று விதைகள் வழங்கி வருகிறார்கள். பையண்ணாபுரம், பனகஹள்ளி, எரகனஹள்ளி, கல்மண்டிபுரம் கிராமங்களில் ராகி மற்றும் மக்காச்சோளம் விதைகள் வழங்கப்பட்டன. இந்த கிராமங்களில் விதைப்பு பணிகள் தொடங்கி இருப்பதால் விவசாயிகளுக்கு தரமான சான்று விதைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், விதைகளை மானிய விலையில் பெற்று விவசாயிகள் பயன் பெறும்படியும் வேளாண் உதவி இயக்குனர் மகாலிங்கம் கேட்டுக்கொண்டு உள்ளார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today