ஈரோடு நவ 20:

வீடு வீடாக கொரோனோ தடுப்பூசி செலுத்துவதை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கிராமங்களில் வீடு வீடாக கொரோனோ தடுப்பூசி  செலுத்துவதை ரத்து செய்ய வலியுறுத்தியும், வாரம் ஒரு நாள் சனிக்கிழமை போன்ற வேலை நாட்களில் மட்டுமே தடுப்பூசி முகாம் நடத்திட கோரி, ஈரோடு மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம சுகாதார செவிலியர்கள் வாரத்தின் அனைத்து நாட்களும் தடுப்பூசி முகாம் நடைபெறுவதால் தாய்,- சேய் நலம் பாதிக்கப்படுவதாகவும்,  கொரோனோவுக்கு இலக்கு நிர்ணியிப்பதை கைவிட வேண்டும் எனவும், இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு போன் செய்ய சொல்வதை கூடாது என்பதை வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால்  சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். https://www.erode.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/