ஈரோடு நவ 11:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த மழைகுடைகள் பிடித்தபடி பள்ளிக்கு சென்ற மாணவர்கள். ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக புறநகர்ப் பகுதிகளான சத்தியமங்கலம், கடம்பூர், அந்தியூர், பவானி, கோபி, மொடக்குறிச்சி, வரட்டுப்பள்ளம், குண்டேரிப்பள்ளம், பவானிசாகர் போன்ற பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. ஈரோடு மாநகர் பகுதியில் பெரிய அளவில் மழை பெய்யாவிட்டாலும் சாரல் மழை பெய்து கொண்டு வருகிறது.

தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு அப்பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. பவானிசாகர் அனைத்தும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணையில் 104 அடியை நெருங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை  முதல் மிதமான மழை பெய்தது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

சென்னிமலை, கொடுமுடி, அம்மாபேட்டை, ஈரோடு, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, பவானி போன்ற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. ஈரோடு மாநகர் பகுதியில் கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் ஒரு பகுதி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இங்கு மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இன்று காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் குடைகளை பிடித்தபடி பள்ளிக்கு சென்றனர்.

இதைப்போல் வேலைக்கு செல்லும் அலுவலர்களும் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்நிலையில் பவானி வட்டம் ஜம்பை ஆ கிராமம் மஜரா சின்னியம்பாளையத்தில் லட்சுமி என்பவர் மண் சுவர் வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகள் திருமணமாகி கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார். மகன் ஊனமுற்ற நிலையில் தாயுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில்  பவானி பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக சம்பவத்தன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டின்  பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்தது. நல்லவேளையாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-சென்னிமலை- 29, கொடுமுடி 13.6, அம்மாபேட்டை- 11.2, ஈரோடு 10, மொடக்குறிச்சி 10, கவுந்தப்பாடி 8.2, பவானி  7.8, வரட்டுப்பள்ளம் 7, பெருந்துறை 6, கோபி, சத்தியமங்கலம், கொடிவேரி- 4. https://www.tnschools.gov.in 

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/