ஈரோடு சூலை 17:
கால்நடைகளுக்கு ‘கால்நடை மருத்துவ பேரவை’ எனப்படும் ‘வெட்னரி கவுன்சிலில்’ பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க அங்கீகாரம் உண்டு. இதனை மீறி போலி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதும், அவர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதும் தவறாகும். போலி கால்நடை மருத்துவர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால் ஏற்படும் குறைபாடு, இழப்பீடுகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்காது. மாவட்டங்களில் சில இடங்களில் சினை ஊசி போடுவதற்கு பயிற்சி பெற்ற செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் போலியாக கால்நடை மருத்துவர் எனக்கூறி மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இது தவறாகும். செயற்கை கருவூட்டல் பணியாளர்கள் மாடுகளுக்கு சினை ஊசி போடுவதற்கு மட்டும் மூன்று மாத கால பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு கால்நடைகளுக்கு வரும் நோய், சிகிச்சை முறை, வழங்க வேண்டிய மருந்து குறித்த பயிற்சி இல்லை. எனவே, கருவூட்டல் பணி மட்டுமே செய்ய தகுதியானவர். அவர்களிடம் பிற சிகிச்சை பெறக்கூடாது. போலி மருத்துவர்கள் குறித்த தகவலை, அந்தந்த மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனருக்கும், போலீஸிலும் தெரிவிக்கலாம். போலி மருத்துவர் கண்டறியப்பட்டால் முதன்முறை 1,000 ரூபாயும், இரண்டாம் முறை 1,000 ரூபாயும், ஆறு மாத சிறை தண்டனையும் வழங்கப்படும்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today