ஈரோடு மே 29:ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்படுகிறது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தியதால், மக்கள் நலன் கருதி, காய்கறி, பழங்களை தெருக்களில் விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 14 ஒன்றியத்திலும் வேளாண் துறை, தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், வாகனங்களில் கொண்டு சென்று வீடுகள் அருகே விற்பனை செய்யப்படுகிறது.உழவர் ஆர்வலர் குழு, உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலமும், சில பகுதிகளில் காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் விற்பனை நடக்கிறது. அனைத்து ஒன்றியங்களிலும் விற்பனை நடக்கிறதா என்பதை, ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி நேரில் ஆய்வு செய்தார்.நடமாடும் வாகனங்கள் குறித்த விபரம் பெறவும், யோசனைகள் தெரிவிக்கவும், அந்தந்த பகுதி வேளாண் உதவி இயக்குனர்களை அணுகலாம்.வேளாண் உதவி இயக்குனர்களான, ஈரோடு–9443865485, சென்னிமலை–9443865485, பெருந்துறை–7502402545, அம்மாபேட்டை–9942926333, மொடக்குறிச்சி–9750520838, கொடுமுடி–9488576435, பவானி–9788519522, அந்தியூர்–9443546351, கோபி–9443852710, டி.என்.பாளையம்–9489218360, நம்பியூர்–9442454678, சத்தியமங்கலம்–9443838614, பவானிசாகர்–9865306747, தாளவாடி–9842209758 என்ற எண்ணில் விபரங்களை அறியலாம்.தோட்டக்கலை துறை உதவி இயக்குனர்களை – ஈரோடு–9445512170, சென்னிமலை–9787045557, பெருந்துறை–9790611101, அம்மாபேட்டை–9750751385, மொடக்குறிச்சி–9994789202, கொடுமுடி–9789045557, பவானி–9543789894, அந்தியூர்–9442755132, கோபி–9362119780, டி.என்.பாளையம்–8072102951, நம்பியூர்–9486794383, சத்தியமங்கலம்–9095950500 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை, வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி தெரிவித்துள்ளார்.

நிருபர்.
ஈரோடு டுடே