ஈரோடு சூலை 13:

ஈரோடு ஆர்.டி.ஓ., பிரேமலதா தலைமையில் வ.உ.சி., பூங்கா காய்கறி மார்க்கெட்டில் கூடுதல் கட்டண வசூல் செய்வது தொடர்பாக, விவசாயிகள், வியாபாரிகள், குத்தகைதாரர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டத்துக்குப்பின், ஈரோடு அனைத்து காய்கறி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் கூறியது,ஈரோடு வ.உ.சி., பூங்கா காய்கறி கடைகளுக்கான குத்தகைதாரர், அரசு நிர்ணயத்த தொகையைவிட மிகக்கூடுதலாக வசூலிக்கின்றனர்.

நாங்கள் கடையை மூட வேண்டும் என்றும், வாகனங்கள் காய்கறிகளை உள்ளே இறக்க வரக்கூடாது என்றும், எங்கள் வாகனங்களை உள்ளே கொண்டு வரக்கூடாது என குத்தகைதாரர்கள் மிரட்டுகின்றனர். விவசாயிகளும், வியாபாரிகளும் இணைந்து அங்கு வந்து சென்றால்தான் காய்கறி வரத்தாகும். வியாபாரம் செய்ய முடியும். ஏழு ரூபாய் வரிக்கு ஜி.எஸ்.டி., கட்டுவதாக கூறி 10 ரூபாய் வசூலிக்கின்றனர்.

அக்கட்டணத்துக்கான ரசீது வழங்குவதில்லை. ஒரு மூட்டைக்கு, பத்து ரூபாய்க்கு, 30 ரூபாயும், ஒரு தேங்காய்க்கு, 25 காசுக்கு பதில், ஒரு ரூபாய் வாங்குகின்றனர். இதுபற்றிய புகாரை நாங்கள் தெரிவித்தோம். இரண்டு வாரம் அவகாசம் கேட்டுள்ளனர்.

அதை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம்.இவ்வாறு கூறினார். மேலும் சிலர் கூறியதாவது: காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையர் நிர்ணயித்த அனைத்து வகையான கட்டணங்களும், அதே தொகைக்கு மட்டும் வசூலிக்கப்படும். ஒரு ரூபாய் கூட கூடுதலாக வசூலிக்கப்படாது. மார்க்கெட் வியாபாரிகள் வசதிக்காக கழிப்பறை, தண்ணீர் வசதி, குடிநீர் வசதி போன்றவை ஏற்படுத்தி தரப்படும். இவற்றை சரி செய்து கொடுக்க, இரண்டு வாரம் அவகாசம் தேவை என கேட்டுள்ளார்.

இதை ஏற்று, நாங்களும் கூட்டத்தில் கையெழுத்திட்டு மீண்டும் மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய சம்மதித்துள்ளோம். குத்தகைதாரர் இதை மீறி செயல்பட்டால், நாங்களும் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல தயாராக உள்ளோம். இவ்வாறு கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today