ஈரோடு டிச 6:

ஈரோடு மாவட்டத்தில் அனைவருக்கும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக டிசம்பர் 1ம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது.ஈரோடு மாவட்ட கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் அனைவருக்கும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக டிசம்பர் 1ம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் கொரோனா தடுப்பூசி பெற்றவர்களின் விபரம் சேகரிக்கப்படுகிறது. அதில், குடும்ப அட்டையிலுள்ள குடும்ப உறுப்பினர்களில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட விபரங்களை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு நியாய விலைக்கடையில் கொடுக்க வேண்டும்.

எனவே மேற்கண்ட விபரங்களை பூர்த்தி செய்ய தேவையான ஆவணங்களை நியாய விலைக்கடைகளுக்கு செல்லும்போது தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தாத நபர்கள் இருப்பின் அவர்களுக்கு நியாய விலைக்கடையின் அருகிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கலெக்டர் கேட்டு கொண்டார். https://www.erode.nic.in 

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/