ஈரோடு அக் 30:
வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தாதவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. மாநகர பகுதியில் வீடு வீடாக நேரில் சென்று கணக்கெடுப்பு நடத்தப்படுகின்றது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் வாரந்தோறும் இரண்டு நாட்கள் நடைபெற்று வருகின்றது.
மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஏறக்குறைய 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். ஈரோடு மாநகர பகுதியில் மட்டும் 78 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இது தவிர வெளியூர்களில் வசிக்கும் ஈரோட்டை சேர்ந்தவர்கள் 5 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் விபரங்களை வாக்காளர் பட்டியல் அடிப்படையில் சேகரிக்கப்பட்டு வருகின்றது. வாக்காளர் பட்டியல் அடிப்படையில் செல்போனில் தொடர்பு கொள்ளும் ஊழியர்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா, முதல் தவணை மட்டும் போடப்பட்டுள்ளதா அல்லது இரண்டு தவணைகளும் போட்டு முடிக்கப்பட்டுள்ளதா என்ற விபரங்களை சேகரிப்பதோடு, தடுப்பூசி போடாமல் இருந்தால் அதற்கான காரணங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
இதே போல ஈரோடு மாநகர பகுதியில் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்களை கொண்டு ஒவ்வொரு வார்டாக வீடு தோறும் நேரில் சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களின் விபரங்களை சேகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.tnhealth.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/