ஈரோடு டிச 11:
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் இந்த மாபெரும் தடுப்பூசி முகாம் மூலம் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
நம்மை மாவட்டத்தை பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசியை 82 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 49 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டு உள்ளனர். இன்னும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் இன்று 14 -வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது. ஈரோடு மாவட்டம் முழுவதும் 475 மையங்களில் தடுப்பூசி முகாம் தொடங்கியது.
1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்த பணியில் 1,900 பணியாளர்கள் 68 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மாநகர் பகுதியில் 50 இடங்களிலும், நடமாடும் வாகனங்கள் மூலமும் நேரடியாக வீடுகளில் சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றன. மக்கள் ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு வருகின்றனர். குறிப்பாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் தங்களது ஆதார் ஜெராக்ஸ் உடன் வந்து தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர். https://www.tnhealth.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today