ஈரோடு சூலை 15:

நெடுஞ்சாலை துறையில் உள்ள சாலை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து போராட்ட காலத்தை பணி நாளாக அங்கீகரிக்க கோரி தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலுவிடம் மனு வழங்கினர். இதுபற்றி, இச்சங்க தலைவர் வைரவன், மாநில பொதுச் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் கூறியது, கடந்த 1997 ல் தி.மு.க., ஆட்சியில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டி, பத்தாயிரம் சாலை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 2002ல் அ.தி.மு.க., ஆட்சியில் சாலை பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு 80க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கிடையில் சாலை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக கடந்த 2006 பிப்ரவரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். கடந்த 2002 முதல் 2006 ம் ஆண்டு வரை 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கடந்த 2011 முதல் 2021 மார்ச் வரை முதல்வரிடம் கூறி பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், நிறைவேற்றவில்லை. கடந்த பத்தாண்டாக ஏமாற்றப்பட்டுள்ளோம். மீண்டும் தி.மு.க., ஆட்சி வந்ததால், எங்களை பணி நிரந்தரம் செய்து, 41 மாத போராட்ட காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளோம் இவ்வாறு கூறினர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today