ஈரோடு அக்.18:

ஈரோட்டில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் பணியாற்றும் மடி தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. ஈரோடு மாநகர் பகுதியில் சுமை தூக்கும் தொழிலுக்கு அடுத்த படியாக முக்கிய ஜவுளி சார்ந்த தொழிலாக இருப்பது மடிதொழில். ஜவுளி நிறுவனங்களில் வேட்டி, சேலை உள்ளிட்ட துணிகள் மடிப்பது, பேல் போடுவது ஆகிய பணிகளில் சுமார் 3 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறும். அப்போது சதவீதம் அடிப்படையில் கூலி உயர்வு வழங்கப்படும்.இதற்காக மடி தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள், ஜவுளி நிறுவன உரிமையாளர்கள் சார்பில் பேச்சு வார்ததை நடைபெறும். ஆனால் ஈரோட்டில் கடந்த 4 நாட்களாக மடி தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற இருப்பதாகதெரிகிறது. இதை முன்னிட்டு மடி தொழிலாளர்கள், இந்த ஆண்டு தங்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து உள்ளனர். இது மடி தொழிலாளி ஒருவர் கூறும்போது, ‘தொழில் இழப்பு, வருவாய் பற்றாக்குறை காரணமாக மடி தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். வீடு வாடகை கொடுக்கவும், குழந்தைகளுக்கான படிப்பு, உணவு செலவுகளுக்காகவும் மிகவும் சிரமப்படுகிறோம். சமையல் கியாஸ் விலை உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துவிட்டன. குடும்பம் நடத்தவே கடுமையாக கஷ்டப்படுகிறோம். எனவே எங்களுக்கு சம்பள உயர்வை மிகவும் எதிர்பார்த்து இருக்கிறோம். எங்கள் மீது கருணை கொண்டு ஜவுளி நிறுவன உரிமையாளர்கள் கூலி உயர்வு அளிக்க வேண்டும் என்றார். https://www.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/Edit