ஈரோடு செப் 21:

வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஐக்கிய விவசாயிகள் முன்னனி தமிழ்நாடு அமைப்பு இன்று தொடக்கம்.

கடந்த மாதம் 26ம் தேதி சிங்கு எல்லையில் நடைபெற்ற மாநாட்டில் ஐக்கிய விவசாயிகள் முன்னனியின் கிளைகள் அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் உருவாக்குவது என முடிவெடுக்கப்பட்டது. அதன் படி இன்று ஈரோடு பெரியார் மன்றத்தில் விவசாயிகளின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் மூலம் ஐக்கிய விவசாயிகள் முன்னனி தமிழ்நாடு அமைப்பு உருவாக்கப்பட்டு, வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அகில இந்திய அளவில் வருகின்ற 27 ம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாநாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளை வழி நடத்தும் ஐக்கிய விவசாயிகள் முன்னனி அமைப்பின் வேண்டுகோள்படி இன்று ஐக்கிய விவசாயிகள் முன்னனி தமிழ்நாடு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் 64 விவசாய அமைப்புகள் சேர்ந்துள்ளன. வரும் 27ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு தமிழ்நாடு அமைப்பு முழு ஒத்துழைப்பு தர இருக்கிறது. தமிழகம் முழுவதும் ரயில் மற்றும் சாலை மறியலில் ஈடுபட உள்ளோம்.

மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் வரை டெல்லியில் மட்டுமல்ல இந்திய அளவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மிகப்பெரிய அளவிலா போராட்டங்கள் நடைபெறும். உத்தரபிரேதசம் மற்றும் உத்தரகண்ட்டில் நடைபெறவுள்ள தேர்தலில் பா.ஜ.க., தோல்வியடைய வேண்டும் என்பதை அம்மாநில மக்களிடையே வலியுறுத்த உள்ளோம். கார்ப்பரேட்களின் ஆதரவாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் விவசாயிகளுக்கு எதிராக உள்ள மத்திய பாரதிய ஜனதா கட்சியும் வேளாண் சட்டம் குறித்து ஐக்கிய விவசாயிகள் முன்னனி அமைப்போடு விவாதிக்க தயாரா என சவால் விடுவதாகவும் தெரிவித்தார். இதனிடையே மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தலைமை செயல்பாட்டுக்குழு உறுப்பினர் ஹன்னன் முல்லா வேளாண் சட்டங்கள் குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென மேடையிலேயே மயக்கமடைந்து விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/