ஈரோடு அக் 1:

ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்கள் விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பித்தல் வருகின்ற 5ம் தேதிக்குள்ளும், புதியதாக விண்ணப்பிப்பவர்கள் அடுத்த மாதம் 5ம் தேதிக்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.bcmbcmw.tn.gov.in

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/