பெருந்துறை ஆக 24:

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள சிப்காட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இதில் பல ஆயிரக்கணக்கான மனம் படைத்தவர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.இதுபோல் சில வெளிநாட்டவர்களும் சட்ட விரோதமாக முறையாக ஆவணங்கள் இன்றி வேலை பார்த்து வருவதாக அவ்வபோது புகார்கள் வரும். இதைத்தொடர்ந்து பெருந்துறை போலீசார் திடீர் சோதனை செய்து சட்ட விரோதமாக தங்கியிருக்கும் கைது செய்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட சட்ட விரோதமாக தங்கியிருந்த 10 வங்க தேசத்தினரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் பெருந்துறை பணிக்கம்பாளையம் கேஸ் குடோன் அருகில் ஒரு வீட்டில் வெளிநாட்டினர் தங்கி இருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற பெருந்துறை போலீசார்அங்கு தங்கியிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவர்கள் முஜாம்மண்டல், இபாதுல் அலி ஆகியோர் என்பதும் இவர்கள் இருவரும் வங்கதேசம் நாட்டில் இருந்து இந்தியாவின் மேற்கு வங்கம் மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, அங்கிருந்து  ரெயில் மூலம் ஈரோடுக்கு வந்து அங்கிருந்து பெருந்துறையில் தங்கியிருந்தது தெரியவந்தது.

மேலும் இவர்கள் பாஸ்போர்ட், விசா போன்ற உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து இவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் வங்கதேசத்தைச் சேர்ந்த ஜஹங்கர், ஆதாஸ் ஆகியோரும் தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பெருந்துறை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today