ஈரோடு டிச 11:

இந்தியாவில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 12 ராணுவ வீரர்கள்  ஹெலிகாப்டரில் சென்ற போது நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த மலைப்பாதையில் சென்ற போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி சூடு பிடித்தது. இந்த கோர விபத்தில் பிபின்ராவத் அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விபத்து பொதுமக்களிடம் பெரும் துக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. முப்படை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முப்படை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி வளாகத்தில் பிபின் ராவத் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. தலைமையாசிரியர் சுகந்தி, பள்ளி ஆசிரியர்கள் பணியாளர்கள் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பிபின் ராவத் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். உதவி தலைமை ஆசிரியர் கோகிலா பிபின் ராவத் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார். முன்னதாக அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.tnschools.tn.gov.in