சத்தியமங்கலம் நவ 8:

சத்தியமங்கலத்தில் அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு விடுதி வசதி செய்து கொடுக்கவேண்டும் என்று பழங்குடியின மக்கள் வலியுறுத்தி உள்ளனர். சத்தியமங்கலத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரியானது கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இக்கல்லூரியில் தாளவாடி, கடம்பூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மாணவ, மாணவியர்கள் அதிக அளவில் படித்து வருகின்றனர். ஆனால் கல்லூரிக்கு என்று தனியாக விடுதி இல்லாததால் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.கல்லூரி தொடங்கும் போதே விடுதி வசதியையும் செய்து கொடுக்கவேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அரசு அதை கண்டுகொள்ளாததால் தற்போது வெளியிடங்களில் கட்டணம் செலுத்தி மாணவர்கள் தங்கி பயில வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் விடுதி வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்று பழங்குடி மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் நிர்வாகி வி.பி.குணசேகரன் கூறியதாவது,தாளவாடி, கடம்பூர் மலைக்கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் மட்டும் பட்டியல் இன மாணவர்களின் உயர் கல்வியானது சத்தி அரசு கல்லூரி மூலம் சாத்தியமாகி உள்ளது.ஆனால் அதே வேளையில் கல்லூரிக்கான விடுதி இல்லாததால் மலைக்கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் தங்க வசதி இல்லாமல் வெளியிடங்களில் கட்டணம் செலுத்தி தங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பழங்குடி மாணவர்களால் வெளியில் கட்டணம் செலுத்தி தங்கும் அளவுக்கு வசதி இல்லாதவர்கள் என்பதை அரசு கருத்தில் கொண்டு கல்லூரி விடுதி கட்ட அரசு முன்வர வேண்டும். விடுதி கட்டும் வரை மாணவர்கள் வெளியில் அறைகள் எடுத்து தங்குவதற்கான கட்டணத்தை அரசு மாணவர்களுக்கு வழங்க முன்வர வேண்டும். இவ்வாறு குணசேகரன் கூறினார். https://www.gactvm.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/