ஈரோடு டிச 15:

ஈரோடு பிரப் சாலையில் உள்ள வருவாய் கோட்ட அதிகாரி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட உதவி செயலாளர் வீ.ராஜு தலைமை வகித்தார்.

மாவட்ட உதவித்தலைவர் ப.மாரிமுத்து, மாவட்ட குழு உறுப்பினர்கள் அம்மணியம்மாள், கொங்குநதி, செந்தில்குமார், ஆனந்தன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, புதுச்சேரியில் அதிகப்பட்சமாக ரூ.3,800, தெலுங்கானாவில் ரூ.3,016 என பல மாநிலங்களில் அதிகமாக வழங்குகின்றனர்.

தமிழகத்தில், ரூ.1,000 மட்டுமே வழங்கப்படுகிறது. தி.மு.க, ஆட்சிக்கு வந்ததும் ரூ.1,500 என உயர்த்தி வழங்கப்படும் என தேர்தல் பிரசாரத்தில் அறிவித்தனர். ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆன போதிலும் இதுவரை உயர்த்தப்படவில்லை. தற்போதைய விலைவாசி உயர்வு, பல ஆண்டுகளாக உயர்த்தாதது போன்றவற்றை கருத்தில் கொண்டு, மாதம் ரூ. 5,000 என உயர்த்தி வழங்க வேண்டும்.

இதனை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், அவர்களை பாதுகாப்போருக்கும் வழங்க வேண்டும், என வலியுறுத்தினர். ஆர்.டி.ஓ, அலுவலக வாயலை அடைந்து மூன்று சக்கர சைக்கிள்களுடன் மறியலில் ஈடுபட்டனர். கோரிக்கையை மனுவாக வழங்கினால், அரசிடம் வழங்குவதாக போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து மாலை, 4 மணிக்கு மனு வழங்கிவிட்டு கலைந்தனர். https://www.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today