அந்தியூர் ஆக 10:
அந்தியூர் தாலுகா நகலூரில் விவசாயிகளுக்கு அந்தியூர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தில் அங்கக வேளாண்மை தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது. அந்தியூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.கார்த்திகேயன் தலைமை வகித்தார். மைராடா அறிவியல் நிலைய விஞ்ஞானி சரவணன், வேளாண் தொழில் நுட்பங்களை விளக்கினார். அம்மாபேட்டை விதைச்சான்று அலுவலர் தமிழரசு, அங்கக சான்று குறித்தும், ரசாயன உரம், பூச்சி கொல்லி மருந்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தவிர்த்து இயற்கை முறையில் சாகுபடி செய்ய யோசனை தெரிவித்தார். இயற்கை வேளாண்மையில் சான்று பெற, விவசாயிகள் தனியாக அல்லது குழுவாக பதிவு செய்யலாம். பதிவு கட்டணம் தனி நபர், சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 700, தனி நபர் பிற விவசாயிகள் ரூ.3 ஆயிரத்து 200, விவசாயிகள் குழு பதிவுக்கு ரூ.7 ஆயிரத்து 200, வணிக நிறுவனங்களுக்கு ரூ.9 ஆயிரத்து 400 செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என யோசனை தெரிவித்தனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today