ஈரோடு சூலை 29:

ஈரோடு மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் தாளவாடி வட்டாரம் கோட்டமாளம் கிராமத்தில் காய்கறி விவசாயிகளுக்கான பயிற்சி நடந்தது. வட்டார தொழில் நுட்பக்குழு அமைப்பாளரும் வேளாண்மை துறை உதவி இயக்குனருமான வி.மகாலிங்கம் தலைமை தாங்கினார். வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீர் காய்கறி பயிர்களில் அங்கக வேளாண்மை என்ற தலைப்பில் இந்த பயிற்சி நடந்தது. இயற்கை வழி விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் மகாலிங்கம் பேசினார். வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள் குறித்து துணை அதிகாரி க.பத்மநாபன் பேசினார். விவசாயிகளுக்கு விதை கிராம திட்டத்தில் ராகி, பயறு வகை விதைகள் இலவசமாக வழங்கப்பட்டது. பயிற்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மாதேஷ், உதவி வேளாண்மை அதிகாரி பிரசாந்த், வட்டார தொழில் நுட்ப மேலாளர் சங்கர் உள்பட பலர் பலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today