அந்தியூர் நவ 18:

அந்தியூர் அருகே சக்தி நகரில் இயங்கும் குமரகுரு வேளாண் கல்லுாரி மூன்றாமாண்டு மாணவர்களுக்கு, விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை சார்பில், அங்கக வேளாண்மை தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது. ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்கக சான்றுஉதவி இயக்குனர் சு.மோகனசுந்தரம் தலைமை வகித்தார்.

அங்கக சான்று ஆய்வாளர் மகாதேவன், இயற்கை வேளாண் செய்வதன் நன்மைகள் குறித்தும், அங்ககச்சான்று குறித்தும் பயிற்சி வழங்கினார். அங்கக வேளாண்மையில் ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தவிர்த்து இயற்கை முறையில் பண்ணையில் இருந்து பெறப்படும் இடுபொருட்களை மட்டுமே கொண்டு சாகுபடி செய்ய வேண்டும். இயற்கை வேளாண்மையில் சான்று பெற விருப்பம் உள்ளவிவசாயிகள், தனியாகவோ, குழுவாகவோ பதிவு செய்யலாம்.

தனி நபர், சிறு, குறு விவசாயிகள் பதிவு கட்டணம்,2,700 ரூபாய். தனி நபர், பிற விவசாயிகளுக்கு, 3,200 ரூபாய், விவசாயிகள் குழுவுக்கு (25 விவசாயிகள் ஒன்றிணைந்த குழு) 7,200 ரூபாய், வணிக நிறுவனங்களுக்கு, 9,400 ரூபாய் செலுத்தி பதிவு செய்யலாம்.அங்கக சான்று பெற குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், என விளக்கினர்.

உதவி பேராசிரியர் பாஸ்கரன், செல்வகுமார், விதை சான்று அலுவலர் கணேசமூர்த்தி ஆகியோர் பேசினர். விதைப்புக்கு முன்பு விதை தரத்தை உறுதி செய்ய வேண்டும். விதையின் புறத்தூய்மை, முளைப்பு திறன், ஈரப்பதம் ஆகியவற்றை தெரிந்து தரமான விதைகளை தேர்வு செய்ய ஈரோடு சத்தி ரோடு, வீரபத்திரா 2-வது வீதி ஆனூர் அம்மன் கட்டிடத்தில் உள்ள விதை பரிசோதனை அலுவலகத்தை விவசாயிகள் அணுக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். https://www.tnagrisnet.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/