சென்னிமலை செப் 8:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் விதைச்சான்று துறை மூலம், தரமான விதை உற்பத்தி குறித்து, வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் புத்துாட்ட பயிற்சி நடந்தது.சென்னிமலை வட்டார வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் சங்கர் தலைமை வகித்து பயிற்சியை துவக்கி வைத்தார். விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை மூலம் கணினி மென்பொருள் மூலம் விதைச்சான்று பணி நடக்கிறது. அதனை எவ்வாறு மேற்கொள்வது, விதைப்பண்ணை பதிவு செய்தல், விதைப்பண்ணை பராமரிப்பு, கலவன்களை நீக்குதல், நோய் தாக்குதலில் இருந்து விதை பண்ணைகளை பாதுகாத்தல், களை பயிர்களை நீக்கி தரமான விதை உற்பத்தி செய்வது குறித்து விதை சான்று அலுவலர் மா.கணேசமூர்த்தி பேசினார்.விதைச்சான்று அலுவலர்கள் மு.நாசர் அலி, ரா.ேஹமாவதி, வெ.ராதா ஆகியோர் விதை உற்பத்தியாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். ஈரோடு, கொடுமுடி, பவானி, மொடக்குறிச்சி, சென்னிமலை, பெருந்துறை பகுதி உதவி விதை அலுவலர்கள் பங்கேற்றனர்.
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/