கோபிசெட்டிபாளையம் டிச 15:
விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை மூலம், தரமான விதை உற்பத்தி குறித்த புத்துாட்ட பயிற்சி கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் நடந்தது. ஈரோடு மாவட்ட வேளாண் துணை இயக்குனர் அசோக் தலைமை வகித்து பயிற்சியை நடத்தினார்.
விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் சு.மோகனசுந்தரம் ஆகியோர் விதை உற்பத்தி நடைமுறைகள், தரமான விதை உற்பத்தியை உறுதி செய்வது குறித்து விளக்கினார். அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் 97 கிராம பஞ்சாயத்துக்களில் அங்கக சான்று பெறுவது குறித்து விளக்கப்பட்டது.
விதை சான்று அலுவலர் மா.கணேசமூர்த்தி, விதை பண்ணை பராமரிப்பு, பயிர் விலகு துாரம், கலவன்களை நீக்குதல், பூச்சி மற்றும் நோய் தாக்குதல், விதை பயிரை பாதுகாத்தல் குறித்து செயல் விளக்கம் காண்பித்தனர். வேளாண் அலுவலர்கள் வெ.ராதா, கவிதா உட்பட பலர் பேசினர். https://www.tnagrisnet.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today