ஈரோடு செப் 21:

ரயில் நிலையம் அருகே இன்று அகில இந்திய ரயில் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ரெயில் டிரைவர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சேலம் கோட்ட தலைவர் சந்திரமனோகர் தலைமை தாங்கினார். ஈரோடு கிளை செயலாளர் அருண் குமார் வரவேற்றார். தென் மண்டல துணை தலைவர் முருகேசன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ரெயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவதை நிறுத்த வேண்டும். இரவு பணிக்கான படியை நிறுத்த கூடாது. வேலை செய்யும் தூரத்தை அதிகப்படுத்தி வேலை நேரத்தை அதிகப்படுத்தக் கூடாது. வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கொரோனாவால் இறந்த  தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட டிரைவர்கள் பங்கேற்றனர்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/