ஈரோடு டிச 28:

ஈரோடு ரெயில் நிலையத்தில் லோகோ பைலட் (ரெயில் ஓட்டுனர்) அலுவலகம் முன்பு அகில இந்திய ரெயில் ஓட்டுனர்கள் சங்கத்தினர் சேலம் கோட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் ஊழியர்கள் கருப்பு தினமாக அனுசரித்து கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரெயில் ஓட்டுனர்களுக்கு அடிக்கடி பணிக்காலத்தில் தண்டனை வழங்கப்படுகிறது. இதனை கண்டித்து இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 8 மணி நேர பணியை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களகலந்து கொண்டனர். https://www.indianrailways.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today