ஈரோடு நவ 17:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு மாநகர பகுதியிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைநீர் தேங்கி நிற்கிறது.
மேலும் அந்த ரோடு குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள் அந்தப் பகுதியை கடந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். சில சமயங்களில் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். குண்டும் குழியுமாக மழை நீருடன் காட்சி அளிப்பதால் ரெயில்வே நுழைவு பால பகுதியில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நுழைவு பாலம் வழியாக தான் வெளியூரில் இருந்து ஈரோட்டுக்கு வரும் பஸ்கள், லாரிகள் வருகின்றன. எனவே இந்த ரோட்டை உடனடியாக சீர் செய்ய வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு அ.தி.மு.க. பெரியார் நகர் பகுதி செயலாளர் மனோகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட காளைமாடு சிலை அருகே உள்ள ரெயில்வே நுழைவு பாலம் ரோடு மிகவும் ஆபத்தான சாலையாக உள்ளது. நீர் தேங்கி வாகனங்கள் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இப்பகுதி சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் ரோட்டை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். https://www.tnsta.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/