ஈரோடு டிச 23:

ஈரோடு மேற்கு மற்றும் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், ஈரோடு சிறகுகள் அனைத்து வாகன ஓட்டுனவர்கள் நலச்சங்கம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் ஈரோட்டில் நேற்று நடந்தது.

முகாமில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வி.கதிர்வேல் (கிழக்கு), எம்.சிவக்குமார் (மேற்கு) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது அவர்கள் கூறும்போது, ‘வாகனங்களை அதிவேகமாக இயக்கக்கூடாது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டக்கூடாது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்.

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி செய்யக்கூடாது. வாகன ஓட்டிகள் உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம் ஓட்டக்கூடாது என்றனர். இதில் அனைத்து வாகன ஓட்டுனவர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் சபரிதான் மற்றும் வாகன ஓட்டிகள் பலர் கலந்து கொண்டார்கள். https://www.irsc.road-safety.co.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today