ஈரோடு நவ 11:

ஈரோட்டில் கனமழை எதிரொலி ரயில்வே மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு பொது மக்கள் அவதிப்பட்டனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பகல் மட்டும் இல்லாமல் இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக நள்ளிரவில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

ஈரோடு மாநகர் பகுதியில் நள்ளிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த நிலையில் ஈரோடு சென்னிமலை செல்லும் பிரதான சாலையில் ரங்கம்பாளையம் அருகே உள்ள ரயில்வே நுழைவு பாலத்தில் முறையான மழைநீர் செல்ல வழியில்லாததால் அந்த வழியில் உள்ள வாய்க்காலில் இருந்து ஏராளமான மழைநீர் செல்வதால் அந்த பகுதியாக தினமும் செல்லும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்ல முடியாத நிலையில்  பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

மேலும் சில நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய அவலம் உள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ரங்கம்பாளையம் பகுதியில் முறையான வாய்க்கால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.tnsta.gov.in 

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/