ஈரோடு செப் 29:

ஈரோடு வ.உ.சி., பூங்கா பகுதியில் மாவட்ட அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பழங்குடி மக்கள் பயன்படுத்திய பொருட்கள், நாணயங்கள், கற் சிற்பங்கள், முது மக்கள் பயன்படுத்திய தாளிகள் ஆகியவை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் அரசு அருங்காட்சியகத்தில் வருடம் தோறும் சுற்றுலா தினம் புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருவது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக சுற்றுலா கண்காட்சி ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சுற்றுலா தினம் கண்காட்சி கடந்த 26ம் தேதி தொடங்கியது. அரசு  அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் சுற்றுலா கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது. இந்த கண்காட்சியில் ஈரோடு மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் பற்றிய புகைப்படம் பற்றிய தகவல்கள், தமிழ்நாட்டில் முக்கிய சுற்றுலாத் தலங்களின் புகைப்படங்கள் மற்றும் அந்த சுற்றுலாத் தலங்கள் பற்றிய தகவல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி அணை புகைப்படம், அணை பற்றிய தகவல்கள்,  வெள்ளோடு பறவைகள் சரணாலயம்  புகைப்படம் தகவல்கள், ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோவில்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த புகைப்பட கண்காட்சி இந்த கண்காட்சி இந்த வாரம் முழுவதும் நடைபெறும். காலை 9.30 மணி முதல் மாலை 5.30  மணி வரை சுற்றுலா தினம் புகைப்படக் கண்காட்சிக்கு  பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/