ஈரோடு டிச 17:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக உள்ளது. இதன் காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்தது. இதன் எதிரொலியாக தக்காளி விலை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஈரோடு மாவட்டத்திலும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு தாளவாடியில் இருந்து அதிக அளவில் தக்காளி வரத்து ஆகும். மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்தது. கடந்த மாதம் தொடக்கத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் 40 வரை விற்பனையானது. பின்னர் வரத்து குறைவால் தக்காளி தேவை அதிகரித்து.

ஆனால் ஒரு கிலோ தக்காளி கிடுகிடுவென உயர்ந்து ரூ.150 வரை விற்பனையானது. தக்காளி விலையை கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்தது. பின்னர் வரத்து அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக தக்காளியின் விலை மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.

இந்நிலையில் இன்று ஈரோடு வ.உ.சி. பெரிய மார்க்கெட்டில் எப்போதும் 1,500 மூட்டைகள் வரத்தாகும் இடத்தில் இன்று 5 ஆயிரம் மூட்டை தக்காளி வரத்தானது. இதனால் தக்காளி விலை மேலும் குறைந்தது. இன்று 25 கிலோ தக்காளி மூட்டை ஆயிரத்துக்கும், 14 கிலோ தக்காளி மூட்டை ரூ.500-க்கும் விற்பனையானது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.35 முதல் ரூ. 40 வரை விற்பனையானது. https://www.tnagrisnet.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today