ஈரோடு சூலை 24:

ஈரோட்டில் நேற்று முன்தினம் வரை, 5 லட்சத்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும், சிரமமின்றி தடுப்பூசி போடுவதற்காகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி கடந்த ஜூன் 24ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி ஈரோட்டில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினசரி சுழற்சி முறையில் தலா 20 வார்டுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன்படி இன்று 113 இடங்களில் கொரோனா தடுப்பூசியான கோவிஷில்டு தடுப்பூசி பொதுமக்கள் 19 ஆயிரத்து 500 பேருக்கு செலுத்தப்பட்டது. ஒவ்வொரு மையங்களிலும் டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. சில மையங்களில் முதலில் வந்த 100 பேருக்கும், ஒரு சில மையங்களில் 150 பேருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியில் இன்று 20 இடங்களில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. முதலில் வந்த 200 பேருக்கு டோக்கன் அடிப்படையில் செலுத்தப்பட்டது. ஒரு சில மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசி செய்து கொண்டனர். குறிப்பாக பெண்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today