ஈரோடு டிச 6:
ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண்மை துறை சார்பில் கோபியில் உலக மண் வள தின விழாவையொட்டி ‘உவர் நிலத்தை தவிர்ப்போம், மண்ணின் உற்பத்திறனை பெருக்குவோம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜீவதாயளன் தலைமை தாங்கினார்.
காசிபாளையம் கனரா வங்கியின் முதுநிலை மேலாளர் ரகுபதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கள அலுவலர் வினோத், ஜனகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு மண் வள அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட மண் பரிசோதனை அலுவலர் செந்தில்செல்வி, மண் வள அடையாள அட்டையின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
வேளாண் அறிவியல் நிலைய அலுவலர் பிரேமலதா, மண்ணியல் துறை விஞ்ஞானி திருமூர்த்தி மண் பரிசோதனை மற்றும் உவர் நில மேம்பாட்டு முக்கியத்துவம் குறித்து பேசினர். முன்னதாக மண்வள மேம்பாட்டு கண்காட்சி, மண் மாதிரி சேகரித்தல் பற்றிய செயல்விளக்கமும் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. இதில், கோபி, சத்தி, டின்பாளையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். https://www.tantransco.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/