ஈரோடு ஜூலை 13 :

அரசு போக்குவரத்து கழக டவுன் பஸ், கிராமங்களுக்கு செல்லும் குறிப்பிட்ட பஸ்களில் மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் செல்லும் உதவியாளர் இலவசமாக பயணம் செய்ய, அரசு உத்தரவிட்டது. கொரோனாவுக்கான முழு ஊரடங்குக்கு முன்பும், தற்போது பஸ் இயக்கம் துவங்கிய நிலையிலும் அதுபோன்ற பஸ்களில் இலவசமாக இவர்கள் பயணிக்கின்றனர். இந்நிலையில் மகளிர், திருநங்கை, மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர் என அச்சிடப்பட்ட டிக்கெட்டை நேற்று முதல் பயணிகளுக்கு வழங்கி வருகின்றனர். இலவசமாக பயணிக்கும் பயணிகளும் டிக்கெட் பெற்று பயணிக்க வேண்டும். இதன் மூலம் எத்தனை பேர் தினமும் இந்த நான்கு தலைப்புகளில் பயணிக்கிறார்கள் என்பதை அரசு கணக்கிட டிக்கெட் வழங்கி வருகின்றனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே

https://www:erode.today