ஈரோடு நவ 10:

ஈரோடு திண்டல் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வரும் நந்தகுமார், ஈரோடு பொன் வீதிக்கு பணி நிமித்தமாக சென்றுள்ளார். அப்போது பொன் வீதியில் கிடந்த 50 ஆயிரம் ரூபாயை எடுத்த நந்தகுமார், அருகில் இருந்தவர்களிடம் இது குறித்து விசாரித்துள்ளார். முறையான பதில் இல்லாததால் ஈரோடு நகர காவல் நிலையத்தில் 50 ஆயிரம் பணத்தை நந்தகுமார் ஓப்படைத்தார்.

இதனிடையே நகைக்கடையில் வேலை செய்து வரும் சோமசுந்தரம் என்பவர் தான் கொண்டு சென்ற 2 லட்சத்தில் 50 ஆயிரம் ரூபாயை காணவில்லை. நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில் சாலையில் கிடந்து நந்தகுமார் ஒப்படைத்த பணம் சோமசுந்தரத்துடையது என தெரியவந்ததையடுத்து டி.எஸ்.பி., ஆனந்தகுமார், சோமசுந்தரத்திடம் 50 ஆயிரம் பணத்தை திரும்ப ஒப்படைத்தார்.

மேலும் நேர்மையாக சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நந்தகுமாரை பாராட்டிய காவல் துறையினர் 500 ரூபாய் அன்பளிப்பும் கொடுத்தனர். https://www.eservices.tnpolice.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/